இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்படுகிறது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி சேரா நாடுகள் அமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்தறியாது பான் கீ மூன், தன்னிச்சையாக நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது குறித்து விசனம் தெரிவித்துள்ள அமைப்பு இது குறித்து தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாதெனவும் குறிப்பிட்ட சில நாடுகள் மீது மட்டும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை பிரயோகித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சினையாக மாறக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இது சர்வதேச அரங்கில் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும் எனவும் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















