Thursday, September 09, 2010

மனித உரிமைகளை மதிக்கும் தன்மை இலங்கையில் குறைந்து கொண்டே செல்கிறது என அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றச்சாட்டு

Addthis

usstate.jpg - 114.31 Kb3 தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் தன்மை குறைந்து கொண்டே செல்வதாக 2009ம் ஆண்டிற்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இரண்டு தரப்பையும் குறை கூறியுள்ள அறிக்கை யுத்தத்தின் பின்னரும் நிலமை மேம்படாமல் இருப்பது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களை அமைப்பதை அரசு தவிர்த்து வருவதையும் குறை கூறி இருக்கும் இந்த அறிக்கை இதன் காரணமாக சுயாதீனமான மனித உரிமைகள் கமிசன், லஞ்ச ஊழல் கமிசன், பொலிஸ் கமிசன் போன்றவற்றை அமைக்க முடியாமல் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form