Thursday, September 09, 2010

பிரிட்டிஸ் மகாராணி இலங்கையிடம் மன்னிப்புக் கோர வேண்டுமாம்

Addthis

champika.jpg - 25.36 Kbஎமது நாட்டை  அடிமைப்படுத்தி வைத்து நாட்டை அழித்து வளங்களைச் சூறையாடியமைக்கு பிரிட்டிஸ் அரசி மன்னிப்புக் கோருவதோடு நட்டஈடும் தர வேண்டுமென்று சுற்றாடல் அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈவிரக்கமற்ற வகையில் மனித உரிமைகளை மீறிச் செயற்படுபவர்கள் எமது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாக கருத்து வெளியிடுவது நகைப்புக்கிடமானது. இவர்களின் கைப்பொம்மையாகச் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையும் எம் மீது குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்த வேண்டுமென வக்காளத்து வாங்குகிறது என்று தெரிவித்த சம்பிக ரணவக தமிழ்ப் பிரிவினை வாதிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் துணை போவதாக குற்றம் சாட்டினார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form