Tuesday, September 07, 2010

அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் 10000 புலிகளை விடுதலை செய்ய வேண்டி வரும் என்கிறார் மைத்திரிபால சிறிசேன

Addthis

sirisenaa.jpg - 1.25 Mbவிடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அவ்வாறு நீக்கினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10,000 விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு  மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீக்கும் படி எதிர்க்கட்சிகள் சத்தமிடுகின்றன. ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் தான் 10 ஆயிரம் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் விசாரணைகளை நிறைவு செய்யாது இடை நடுவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டி வரும். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும் எனவும் மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form