Tuesday, September 07, 2010

ஐ.நா செயலரின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்பு என்கிறார் ஜி.எல். பீரிஸ்

Addthis

glpiris.jpg - 13.93 Kbஇலங்கை நிலமை குறித்து நிபுணத்துவ ஆலோசனை வழங்குவதற்கு குழுவை நியமிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு  மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு எதிராக ஐ.நா. செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளனவா என்று ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த யோசனைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம். பான் கீ மூனின் இந்த யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதை அந் நாடுகளே எம்மிடம் கூறியுள்ளன என்றும் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து சில மாதங்களுக்கு முன் ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்ஸிலில் ஆராயப்பட்டது. அதில் அந்தக் குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றனவா என்று ஏன் விசாரிக்க மீண்டும் எனக் கேள்வியெழுப்பிய பீரிஸ் தமக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு எதிராகவே சர்வதேச நாடுகள் வாக்குகளை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form