Thursday, September 09, 2010

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைக்கான குழு நியமனம்

Addthis

sarathfonseka5.jpg - 28.11 Kbதடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று மகிந்த றாஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் எச் எல் வீரதுங்க, மேஜர் ஜெனரல் ஏ. எல். ஆர். விஜயதுங்க, மற்றும் டீ. ஏ ஜயதிலக்க ஆகிய மூவரும் இந்த விசாரணைகளை நடத்துவர் என்றும் விசாரணைகள் இம்மாதம் 16 மற்றும் 17ம் திகதிகளில் நடைபெறும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணை எதிர்வரும் 16ம் திகதியும் இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 17ம் திகதியும் நடைபெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகள் கடற்படை தலைமையத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form