Thursday, September 09, 2010

சுவிசில் 24ம் திகதி நடக்கும் தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் எந்தத் தொடர்புமில்லை – ருத்ரகுமாரன்

Addthis

rudrakumaran1.jpg - 54.26 Kbசுவிற்சர்லாந்தில் இம்மாதம் 28 ஆம் திகதி Swiss Tamil Diaspora  என்ற அமைப்பு நடாத்தப் போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் இதற்கென நாடுவாரியாக அமைக்கப்பட்டுவரும் சுயாதீனமான செயற்பாட்டுக் குழுக்களால் மட்டுமே ஒழுங்கு செய்யப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சுவிஸில் வாழும் மக்கள் மத்தியில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை அறிவிக்கும் பிரசுரம் ஒன்றில் மேற்படித் தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவுமே நடைபெறுகின்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவலாகும். எம்முடன் எவ்வித கலந்தாலோசனையுமின்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரிய நேர்மையற்ற ஒரு செயற்பாடாகும் எனவும் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.  

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form