‘குடு’ லாலுக்கும் இலங்கையில் உயிரச்சம்
கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவது உள்ளிட்ட செயல்களில் மேர்வின் சில்வாவின் வலது கரமாகச் செயற்பட்ட குடு லால் எனப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் தற்போது இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்குள் தன்னைப் போல் பல பாதாள உலகத் தலைவர்கள் அரசியல் வாதிகளின் உத்தரவுக்கிணங்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் தான் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் உடனடியாகவே தன்னைக் கொன்று விடும்படி அமைச்சர் மேர்வின் சில்வா உத்தரவிட்டுள்ளதாகவும் தனது விண்ணப்பத்தில் ‘குடு’ லால் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் திரை மறைவு வன்முறைகளுக்கு தான் துணை நின்றதை ஒத்துக் கொண்டுள்ள ‘குடு’ லால் தன் மூலம் பல சட்டவிரோத செயல்களைச் செய்வித்த அமைச்சர் மேர்வின் சில்வா தன்னுடைய தேவைகள் நிறைவடைந்ததும் அனைத்துப் பழிகளையும் தன் தலை மீது போட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மேர்வின் சில்வாவின் பூரண ஆசீர்வாதத்துடனேயே குடு லால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குடு லாலை விமான நிலையத்திற்கும் மேர்வின் சில்வாவே அழைத்து வந்து விசேட விருந்தினர் பகுதியூடாக அனுப்பி வைத்ததாகவும் இங்கிலாந்தில் உளவுப் பிரிவினருடன் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கெதிரான திரை மறைவு நடவடிக்கைகளுக்காகவே இவர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
இங்கிலாந்தில் சில சட்டவிரோத செயல்களை குடுலாலின் துணையுடன் செய்து விட்டு அந்தப் பழியை தமிழ் அமைப்புகள் மீது போடுவதற்கு இலங்கைத் தூதரகம் முயற்சி மேற்கொள்ளலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















