தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தராது - ஜே.வி.பி தலைவருக்கு திடீர் ஞானோதயம்
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது என்றும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதிலேயே அது குறியாய் இருக்கிறது என்றும் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட உள்நாட்டில் காணப்பட்ட ஏனைய ஜனநாயகப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதனால் பாரியளவிலான சர்வதேசத்தின் உதவிகளை இழந்துள்ளதுடன் அநாவசியமான பகையையும் தலையீடுகளையும் தேடிக் கொண்டுள்ளது எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும் பயங்கரவாதப் பிரச்சினையே இருக்கின்றது என்றும் தொடர்ந்து கூறி வந்த சோமவன்ச அமரசிங்கவிற்கு தேர்தல் காரணமாகவே இந்த ஞானம் பிறந்துள்ளதாக தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















